முக்கிய செய்திகள்

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோவிலில் அன்னாதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மீதமுள்ள 29 இடங்களிலும் மற்ற அமைச்சர்கள் பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளனர்.