முக்கிய செய்திகள்

அதிமுக அமைச்சர்களை மீசையில்லாமல் பார்க்க விரும்பவில்லை: கனிமொழி

சந்திரசேகரராவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி கூறியதாவது:

நேற்று சென்னையில் இல்லாததால் சந்திரசேகர ராவைச் சந்திக்க இயலவில்லை. அதனால் சந்தித்தேன். பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம். சந்திரசேகர ராவை சந்தித்ததில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஸ்டாலின் நேற்றே கூறிவிட்டார். மரியாதை நிமித்தமாகவே சந்திரசேகர ராவைச் சந்தித்தேன்.  சந்திப்பில் அரசியல் ஏதும் இல்லைசிவி சண்முகம் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுகவின் அமைச்சர்களை மீசை இல்லாமல் பார்க்க விரும்பவில்லை என்று கூறினார்.