முக்கிய செய்திகள்

அனிதா மரணம்: தமிழக டிஜிபி ஆஜராகி விளக்கமளிக்க எஸ்சிஎஸ்டி ஆணையம் உத்தரவு

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தமிழக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் ஆஜராகி விளக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய துணை தலைவர் முருகன் கூறியுள்ளார். திருச்சியில் மாவட்ட மற்றும் மாநகர அதிகாரிகளுடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதா மரணம் குறித்து, டிசம்பர் 12ஆம் தேதி டெல்லியில் விசாரணை நடைபெறும் என்றார்.