முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் செல்லும் ரோட்டில் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்தியது. இதில்8பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் மக்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளார். இது குறித்து நியூயார்க் மேயர் பேசுகையில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை செய்ய வேண்டும் எனவும் பேசினார்.