கரோனா தடுப்பூசி யாக ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி மருந்து அமெரிக்காவில் 24-மணி நேரத்துக்குள் போடப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஃபைசர் நிறுவன தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்துமுகமை ஒப்புதல் அளித்ததை அடுத்து அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
