முக்கிய செய்திகள்

ஆப்கனில் உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில் புகுந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த வில்லை.

கடந்த வாரம், இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.