முக்கிய செய்திகள்

இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: தமிமுன் அன்சாரி

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு யாருக்கும் ஆதரவு இல்லை என சென்னையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அன்சாரி 2016 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.