முக்கிய செய்திகள்

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: செங்கோட்டையன்..


இடை நிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவர் போராட்டக்காரர்களிடம் கூறியதாவது: ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு காண வேண்டப்படுகிறது. குழு பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும். இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு திருத்தம் கோரும் வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. மேலும் 7 வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி20,600-ல் இருந்து ரூ.65 ஆயிரமாகவும் தனி ஊதியம் 750-ல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.