இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..

சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் தினம் : யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை..

Recent Posts