இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40.25 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக அதிக அளவில் உள்ளது.
தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
