முக்கிய செய்திகள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி: வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மென் ஆஷ்டன் டர்னர், டார்சி ஷார்ட் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர், வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டர் நைல் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய பீட்டர் சிடில், பில்லி ஸ்டாண்ட்லேக் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பேட் கமின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:

ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரே, பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், ஜேய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பேரெண்ட்ராப், நாதன் லயன், ஆடம் சாம்பா, டார்சி  ஷார்ட் .