முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட்: முதல் ஆட்டநேர முடிவில் இந்தியா 11/1

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் முரளி விஜய், புஜாரா தலா 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இப்போட்டியில் டாஸ் வென்று  முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சந்திமால் 57 ரன்களும், கருணரத்னே 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.