முக்கிய செய்திகள்

இந்த நிலையையும் திமுக எளிதில் எதிர்கொள்ளும்: வைகோ..


ஆர்.கே.நகரில் பாய்ந்த பணவெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கிவிட்டது. இந்த நிலைமையையும் திமுக எளிதில் எதிர்கொள்ளும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பிலிருந்தும் பாய்ந்த பணவெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கிவிட்டது.

எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திமுக, இந்த நிலைமையையும் எளிதில் எதிர்கொள்ளும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.