முக்கிய செய்திகள்

இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.