முக்கிய செய்திகள்

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்..

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் விமானநிலைய ஓடுப்பாதைகளிலும் தீவிர சோதனை நடத்த மன்னர் ஜார்ஜ் வி டோக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பயணிகள் விமானநிலைய பகுதிக்கு வருவதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (பிப்.,12, இன்று) லண்டனில் இருந்து விமான பயணம் மேற்கொள்வோர் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு மற்ற விபரங்களை பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.