முக்கிய செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிரும் என்றோம், இப்போது பின்வாங்காத இந்தியா என்கிறோம்: மோடி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிரும் இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதில் இருந்து பின்வாங்காத இந்தியா குறித்து பேசி வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் பத்திரிகை சார்பில் நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய மோடி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஊழலை முற்றிலும் ஒழிப்பதற்காக  அரசியலில் எத்தனை பெரிய விலையைக் கொடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் தவறான மனிதர்கள் அச்சத்தில் உறைந்திருப்பதாக கூறிய மோடி, இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.