முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது செல்போன் உபயோகிக்கத் தடை..


உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.