முக்கிய செய்திகள்

உளறிய அமித் ஷா, அலறிய பாஜக

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா, ஊழல் ஆட்சியைத் தந்ததில் எடியூரப்பா முதலிடத்தில் இருப்பவர் எனக் கூறிவிட்டார். அருகில் இருக்கும் பாஜக தலைவரோ பதறிப்போனார். அமித் ஷா வாய்தவறி இப்படிக் கூறியதாக சொல்லப்பட்டாலும், சமூக வலைத்தளங்களில் அவரது இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.