முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது..? : உயர்நீதிமன்றம் கேள்வி


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் என்ன நிலையில் உள்ளது என வினவியது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த திமுக வழக்கறிஞர் வார்டு வரையறை தொடர்பான வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.