முக்கிய செய்திகள்

உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி கமல்ஹாசன் அறிவிப்பு


திருச்சி திருவெறும்பூா் பகுதியில் காவலாின் அத்து மீறலால் உயிாிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் மகளிா் தின விழா பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசி வருகிறாா். அப்போது அவா் கூறுகையில், திருச்சியில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது. நீதியை காக்க வேண்டியவா்கள் அநீதி இழைத்துள்ளனா்.

இந்த சம்பவத்தில் உயிாிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். கொள்கை என்ன என்ன என்று கேட்கின்றனா். 180 நாட்களில் கொள்கைகள் புத்தகமாக வழங்கப்படும். அதனை படித்துப் பாா்த்து தொிந்து கொள்ளுங்கள்.

மய்யத்தில் இருந்து பாா்த்தால் தான் நீதியும், நியாயமும் தொியும் – கமல்ஹாசன்