முக்கிய செய்திகள்

ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்போம்: ட்ரம்ப்

ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியா, ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான பல்வேறு நாடுகளின் கூட்டுப்படையினர் போரிட்டு வருகின்றனர். ஐஎஸ் இயக்கத்திடம் இருந்த பெரும்பகுதிகளை இந்தப் படையினர் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 79நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, அமெரிக்கப் படைகள், கூட்டணி நாடுகளின் படைகள், சிரியப் படை ஆகியவற்றின் முயற்சியால், ஐஎஸ் ஆதிக்கத்தில் இருந்த நிலப்பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். நூறு விழுக்காடு வெற்றிபெற்றதாக அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.