முக்கிய செய்திகள்

ஒரு சகாப்தத்தின் முடிவு: கலைஞர் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்


மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழாஞ்சலி வருமாறு:

கலைஞரின் மறைவு என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. இந்தியாவுக்கும் தமிழ் இன மக்களுக்கும் ஒரு பேரிழப்பு

கலைஞர் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர், 50 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர், 5 முறை முதலமைச்சர் –இவை வரலாற்றுச் சாதனைகள்.

அவற்றையும் விஞ்சும் சாதனை உண்டு. அது தான் கலைஞரின் பன்முகம். அரசியல், எழுத்து, கவிதை, ஊடகம், கலை, இயல், இசை, நாடகம், சினிமா, தத்துவம், தமிழ் இலக்கியம், இலக்கணம் என்று பல துறைகளில் முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர் ஒருவரே.

இவ்வாறு தன் அஞ்சலியில் அவர் தெரிவித்துள்ளார்.