முக்கிய செய்திகள்

ஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்

டெல்லியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவு காலையில் வெகுநேரமாக திறக்காமல் இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்களும், 4 ஆண்களும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

அவர்கள் அனைவரின் கண் மற்றும் வாய்கள் துணியால் கட்டப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த வீட்டில் தடயங்களை சேகரித்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 11 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அக்குடும்பத்தினர் மளிகை வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.