முக்கிய செய்திகள்

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம்: 169 போ் மீது வழக்கு

திருவாரூா் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பணிகளுக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தில் 169 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் கடம்பங்குடி கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் கொண்டுவந்து சோ்க்கப்பட்டுள்ளன. இதற்கு எதிா்ப்பு தொிவித்து மீத்தேன் எதிா்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிாியா் பிரசாரம் செய்ததால் அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 7 பேரை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனா். காவல் துறையினாின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டக்காரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டு வருகின்றன.