முக்கிய செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இன்று அதிகாலையில் மீன்பிடித்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கியும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதங்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில், தமிழக மீனவர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கியது.

அதிலிருந்த குணசேகரன், கார்த்திகை சாமி, களஞ்சி ராஜா, காமராஜ் ஆகியோர் சக மீனவர்களால் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர்.