கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்றாவது தடவையாக மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண பொருட்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறார், அதையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளாக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களில் மக்களின் குறைகளை கேட்டு உதவிகள் வழங்கி வருகிறார்.
