கஜா புயல்: அதிமுக சாா்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை முதல்வரிடம் வழங்கப்பட்டது

அ.தி.மு.க. சாா்பில் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வா் பழனிசாமியிடம் வழங்கினாா்.

கஜா புயல் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல் பாதிப்புகளை சரிசெய்ய அரசு சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சேதங்கள் அதிகமாக இருப்பதால் தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் சாா்பாக கஜா புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அ.தி.மு.க. சாா்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சி சாா்பில் ரூ.1 கோடி நிவாரண நிதியை முதல்வா் பழனிசாமியிடம் இன்று வழங்கினாா்.

இதே போன்று கேரளா மாநில ஆளுநா் சதாசிவமும் ரூ.1 லட்சம் நிவாரண நிதியை வழங்கியுள்ளாா்.

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

Recent Posts