முக்கிய செய்திகள்

கஜா புயல் நிவாரணமாக திமுக சார்பில் ரூ.1கோடி: முதலமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் துரைமுருகன்

திமுக சார்பில் கஜாபுயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துரைமுருகன் வழங்கினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து காசோலையை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலும் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசியல் செய்யாமல் நிவாரணப் பணிகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். திமுக அறக்கட்டளை சார்பில் இந்த நிதி வழங்கப்பட்ட போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபுவும் உடன் இருந்தார்.