முக்கிய செய்திகள்

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.