முக்கிய செய்திகள்

கருணாநிதிக்கு ஊன்றுகோல் கொடுக்க பாசத்துடன் காத்திருக்கும் 85 வயது முதியவர்!..


திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊன்றுகோல் கொடுக்க 85 வயதான முதியவர் சென்னை வருகை தந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலம் குறித்து அறிய ஆயிரகணக்கான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருக்கின்றனர்.

அதில் வயதான முதியவர்கள் சிலர், கருணாநிதியை ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் திருவளக்குவளையைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பதற்காக பேருந்தில் ஏறிதன்னந்தனியாக சென்னைக்கு வந்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஆவடி அண்ணனூரைச் சேர்ந்த சங்கரன் என்ற 85 முதியவர் ஒருவர், தனது தள்ளாடும் வயதிலும் கருணாநிதியை சந்திப்பதற்காக,புத்தம் புதிய ஊன்றுகோலுடன் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

எப்படியாவது இந்த ஊன்றுகோலை கருணாநியிடம் கொடுத்துவிட வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார்.

மேலும் இவர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு விபூதி பிரசாதம் வழங்கியுள்ளார். இவர் எந்த கட்சியும் சேர்ந்தவர் இல்லை என்று கூறியுள்ளா