முக்கிய செய்திகள்

கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அனைத்து வசதிகளும் வீட்டில் செய்யப்பட்டுள்ளது. வயதின் காரணமாக கருணாநிதி உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சல் உள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். உடல்நலம் காரணமாக அவரை பார்க்க யாரும் வீட்டிற்கு வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.