முக்கிய செய்திகள்

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகை. ..


மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி நாளை (புதன்) சென்னை வருகை தரவுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடல் தற்போது கோபாலபுரம் இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பிறகு 1 மணிக்கு மேல் சி.ஐ.டி.காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு 3 மணி வரை இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும், பிறகு அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காகக் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி புதனன்று சென்னை வருகை தருகிறார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் வரவுள்ளனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்த சென்னைக்கு வருகை தரவுள்ளனர்.