முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை இரவு 9.50க்கு அறிக்கை

காவேரி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வரப் போவதாக கடந்த சில மணி நேரமாக பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரவு 9.50க்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையே கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் பின்னர் சீரானதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழு கருணாநிதியின் உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kauvery Hospital Statement