முக்கிய செய்திகள்

காலக்கூத்து : திரைவிமர்சனம்..

காலக்கூத்து : திரைவிமர்சனம்..


காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது.

அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது.

என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா..

கதைக்கரு

நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆனது சோக சம்பவத்தால் தான்.

ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களுக்கு தனித்தனியே காதல் பக்கங்களும் இருக்கிறது. சில விசயங்களால் விரக்தியில் இருக்கும் பிரசன்னாவின் மீது சிருஸ்டி டாங்கேவுக்கு காதல் வருகிறது.

பெண் கேட்க வீட்டிற்கு செல்லும் போது எதிர்பாராத சம்பவம் நடந்தேறுகிறது. இன்னொரு பக்கம் கலையரசனுக்கு தன்ஷிகாவின் மீது காதல். இவர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வீட்டை விட்டு பிரிகிறார்கள். இதற்கிடையில் சாலையில் வந்த பகையால் பிரச்சன்னாவின் உயிருக்கு ஆபத்து.

தன்ஷிகா கலையரசன் ஜோடி ஒன்று சேர்ந்தற்கு வீட்டில் எதிர்ப்பு. கலையரசனின் உயிருக்கும் ஆபத்து நேர்கிறது. கலையரசனுக்கு என்ன நடந்தது? பிரசன்னாவுக்கு வந்த ஆபத்து யாரால்?

மூவரும் பிழைத்தார்களா? காலப்போக்கில் நடக்கும் கூத்துக்கள் இவர்களை என்ன செய்தது என்பதே கதை.

படம் பற்றி ஒரு பார்வை

நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்து அசத்தியவர். ஹீரோவாக அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபகாலமாகவே அவர் சில படங்களில் முக்கியமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

கடைசிவரை கதையுடன் பயணித்தலும் அவர் ஒரு செகண்ட் ஹீரோ போல தான். ஆனால் அவர் வந்து போகும் காட்சிகள் முக்கியத்துவம் பெருகிறது. பிரசன்னா உங்க திறமைக்கு இது சாதாரணமாக தான் படுகிறது.

கலையரசன் ஏற்கனவே கபாலி படத்தின் மூலம் பாராட்டை வாங்கினார். இவர் தான் காலக்கூத்தின் மெயின் ஹீரோ. ஒரு சாதாரண இளைஞனுக்குள் காதல் வந்தால் அவன் எப்படி இருப்பான் என ஸ்மார்ட்டாக காட்டியிருக்கிறார். திறமையான நடிகரான உங்களுக்கு படங்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் தேவை.

தன்ஷிகா படத்தின் ஹீரோயின். மதுரை பெண்ணாக அப்படியே மாறியிருக்கிறார். பேச்சில் அவர் அந்த தனி பாஷையை அப்படியே உள்வாங்கியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு கெமிஸ்ட்டிரி சூப்பர். அதிலும் குறிப்பாக அந்த முதலிரவு பாடல் கூடுதல் இம்பிரஷன்.

சிருஸ்டி டாங்கே எப்பவும் போலவே இந்த படத்திலும் சில காட்சிகள் தான். ஆனால் அவருக்கு கதாபாத்திரம் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது. பிரசன்னா சிருஸ்டி ஜோடியை பார்க்கையில் ஏதோ மிஸ் ஆன ஃபில்.

முழுக்க முழுக்க மதுரையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தான் இருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் மட்டுமே கொஞ்சம் ஸ்பீடு.

திறமையான பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் இயக்குனரே. கதையை கரெக்ட்காக சொல்லியிருக்கிறீர்கள். கதைக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவு என்றாலும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

கண்ண கட்டி பாடலால் மனதை ஈர்க்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

ப்ளஸ்

கலையரசன், தன்ஷிகா பேசும் பாஷைகள். சின்ன சின்ன ரொமான்ஸ் இண்ட்ரஸ்டிங்.

காமெடி பிரபலங்கள் இல்லாத குறையை நட்புவட்டார காமெடிகள் நிவர்த்தி செய்கிறது.

இனிமையான கேட்கும் படியான பாடல்கள்.

மைனஸ்

வந்த ஜோரில் அடுத்தடுத்த பாடல்களால் கொஞ்சம் இடஞ்சல்.

பிரசன்னா, சிருஷ்டி காட்சிகள் வந்த வேகத்தில் பிரேக் அவுட்டானது திருப்தியாகல.

மொத்தத்தில் காலக்கூத்து காதலர்கள் மனதில் இடம் பிடிக்கும்.