முக்கிய செய்திகள்

காளையார் கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை..

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியரின் குருபூஜை விழா இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் முன் அமைந்துள்ள மருதுபாண்டியர் சமாதியில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால் குடம் எடுத்தனர். அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். இன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பது குறிப்பிடத் தக்கது.