முக்கிய செய்திகள்

காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

சென்னையில் தலைமைக் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தனை போலீசார் என் கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

ராயப்பேட்டையில் நேற்றிரவு விசாரணைக்காக சென்ற தலைமைக் காவலர் ராஜவேலுவை சிலர் வழிமறித்து கண்மூடித் தனமாக தாக்கினர். இதில், ராஜவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடரபாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த ஆனந்தன் சோழிங்கநல்ஙூரில் பதுங்கி இருப்பதாக காவல் கிடைத்தது. சுற்றி வளைத்த காவல் துறையினரை ஆனந்தன் தாக்க முயன்றதாகவும், அதனால் ஆனந்தனை சுட்டுக் கொல்ல நேரிட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Chennai police killed the rowdy Anandhan in encounter.