முக்கிய செய்திகள்

”காவிரிக்காக போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி” – முத்துகருப்பன் அதிமுக எம்பி..


`காவிரி குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்’ என அ.தி.மு.க எம்பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தைத் தமிழகக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி. முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.