முக்கிய செய்திகள்

குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்டமாக டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 14-ம் தேதிகளில் நடத்தப்படும் என டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி பேட்டியளித்துள்ளார். தேர்தல் நடைமுறைகள் தற்போது முதல் அமலுக்கு வந்துள்ளன. குஜராத் தேர்தலுக்காக 50,128 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படும். டிசம்பர் 18-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.