முக்கிய செய்திகள்

குட்கா வழக்கில் சிபிஐயிடம் விசாரணையை அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி..


குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது தமிழக அரசு வக்கீலிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அரசு தயங்குவதை பார்த்தால் பிரச்சனை மிக தீவிரமாக இருப்பதுபோல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.