முக்கிய செய்திகள்

கோவிலில் வலம் வரும் போது செல்ஃபி வலையில் சிக்கிய மோடி!

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படம் இது. கோவிலுக்குள் ஒருவர் செல்பி எடுக்கும் போது, பின்னணியில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி பதிவாகி உள்ளார். அதுவும் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் துல்லியத்துடன், செல்பி எடுப்பவரின் செல்போன் கேமராவை கச்சிதமாக பார்த்தபடி கடந்து செல்வது தெரிகிறது. செல்பி எடுத்துவர் கெட்டிக்காரர் என்பது தெரிகிறது. பின்புறமாக சற்று தூரத்தில் செல்லும் பிரதமரை தமது செல்ஃபி  பிரேமுக்குள் பதிவு செய்துள்ளார்… அதனைப் பாராட்டித்தான் சவுக்கு சங்கரும் அந்தப் படத்தை தமது ட்விட்டரில் போட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், கோவில் பிரகாரத்தில் தெய்வத்தை வழிபடுவதற்காக வலம் வரும் மோடி, செல்ஃபி எடுப்பதை இத்தனை சரியாக இனம் கண்டு போஸ் கொடுத்திருக்கிறாரே அதுதான்.. .