முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

சென்னை புறநகர் பகுதியாள திருவள்ளுர் மாவட்டத்தை உள்ளடக்கிய பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்

சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அக்டோபரில் சட்டவிரோதமாக இருந்த 130 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. தற்போது 200 ஆழ்துளை கிணறுகள் சட்டவிரோதமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

சார் ஆட்சியர், வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.