முக்கிய செய்திகள்

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற மோடி கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு..

தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அவரது மனசாட்சிக்கு உண்மை என தெரிந்தால் தமிழை ஆட்சி மொழி, வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமர் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர் vநீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.