முக்கிய செய்திகள்

சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் அன்கோவில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் சோதனை

வரி் ஏய்ப்பு புகார் அடிப்படையில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தினர். சென்னை பனகல் பூங்கா அருகே உள்ள பிரம்மாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸ், பணியில் உள்ள லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளில் இந்த சோதன நடைபெற்றது. சரவணா ஸ்டோர்ஸின் இந்த கிளைகளில் மட்டும் ரூ 40 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், தி.நகரில் உள்ள வசந்த் அன் கோ, ஹாட் சிப்ஸ் கடைகளிலும் சோதனை நடை பெற்றது. சென்னையில் 6 இடங்களிலும், கோவையில் 4 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.