முக்கிய செய்திகள்

சூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கண்ணடித்தாலும் அடித்தது குறித்து, கண்ணடித்ததால் ஒரே நாளில் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“கல்லூரியில் இருந்து வந்த பின்னர் செய்திகளில் பார்த்தேன். பிரதமர் மோடியை கட்டித் தழுவிய ராகுல், பின்னர் தன் இருக்கையில் சென்று அமர்ந்த பின்னர் கண்ணடித்தார். இந்த சம்பவங்களைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை” என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் மோடியைக் கட்டிப்பிடித்தது, பின்னர் கண்ணடித்தது போன்ற காட்சிகள் உலக அளவில் ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி கலக்கின. ராகுல்காந்தியின் இந்த திடீர் நடவடிக்கைகளுக்கு, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா என பல அரசியல் பிரபலங்களின் இளையதலைமுறைத் தலைவர்கள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.