முக்கிய செய்திகள்

சென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..


சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்  சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ  ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மெட்ரோ ரயல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சுரங்கப்பாதையில் ரயில் இயக்கப்பட உள்ளதற்கு இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்க மெட்ரோ சேவை உதவும் என அவர் கூறியுள்ளார்.