முக்கிய செய்திகள்

சென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎம்மிற்கு கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி பணத்தை கொள்ளையடித்த ஊழியர் சிவானந்தம் கைது செய்யப்பட்டார்.

மாதத் தவணை அதிகம் செலுத்த வேண்டியிருந்ததால் வங்கி ஊழியர் கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வங்கி ஊழியரிடம் இருந்து ரூ.8.6 லட்சத்தை காவல்துறை பறிமுதல் செய்தது.