முக்கிய செய்திகள்

ஜப்பான், சீனா ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்த ரஜினியின் அரசியல் அறிவிப்பு


தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

இதனால், இன்று காலை முதலே ரஜினிகாந்த் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரது அரசியல் வருகை எப்படி இருக்கும்? என்று உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது தேசிய ஊடகங்களும் விவாதித்து வருகின்றன.
இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீனாவின் முக்கிய ஊடகங்களான ஜப்பான் டைம்ஸ், ஜின்ஹுவா ஆகியவை ரஜினி தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் ரஜினிகாந்துக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.