முக்கிய செய்திகள்

ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..


புதுக்கோட்டை மாவட்டம் தென்னலுாரில் நடந்த ஜல்லிகட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது.புதுக்கோட்டை தென்னலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடந்தது.

இந்த போட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை வாடிவாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் இடித்து கொம்பன் மயங்கி விழுந்தது. முதலுதவிக்கு பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் காளையின் தலையில் பலத்த அடிபட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது.

கொம்பன் காளைக்கு அமைச்சர் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.எந்த ஒரு ஜல்லிகட்டிலும் யார் பிடியிலும் சிக்காத கட்டுக்கடங்காத கொம்பன் காளை வலம் வந்தது.

அதே வாடிவாசலிலேயே வீரமரணத்தை தழுவியது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிங்கப்பூரில் இருப்பதால் அவருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.