முக்கிய செய்திகள்

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் ஆதரவாளர்களால் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜா சாலையில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் இந்தப் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.