டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை பகுதியில் போராட்டம் நடப்பதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
